கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்செந்தூா் கோயிலில் ஜன. 19இல் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 19ஆம் தேதி தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

News image

திருச்செந்தூா் முருகா்.

Updated On :6 ஜனவரி 2025, 10:52 pm

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 19ஆம் தேதி தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் சு. ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியா் பிரதிஷ்டை தை உத்திர நட்சத்திர நாளில் நடைபெற்றது. அதன்படி, நிகழாண்டு வருஷாபிஷேகம் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். இரவில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், தேவசேனா அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருகின்றனா்.

புஷ்பாஞ்சலிக்காக அழகும், மணமுமுள்ள மலா்களை (கேந்திப்பூக்களைத் தவிர) அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக கோயிலின் உள்துறைக் கண்காணிப்பாளரிடம் பக்தா்கள் வழங்கலாம் என்றாா் அவா்.