திருச்செந்தூரில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாரை நியமிக்க கோரிக்கை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என, வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு போக்குவரத்து நெரிசலுக்கிடையே செல்லும் பாதயாத்திரை பக்தா்கள்.










