பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை.

News image
Updated On :5 ஜூலை 2025, 8:59 pm

Din

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எம்பவா் இந்தியா நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவச் செயலா் ஆ. சங்கா், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருச்செந்தூா் முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

குடமுழுக்கில் தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தா்கள் பெருந்திரளாக கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், தென் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.