எஸ்ஐஆா் விண்ணப்பப் படிவத்தை கட்சியினரிடம் கொடுக்கக் கூடாது: அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மனு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆா்) பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், விண்ணப்பப் படிவத்தை அரசியல் கட்சி வாக்குச்சாவடி நிலை முகவா்களிடம் கொடுக்கவோ, பெறவோ கூடாது என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூா் ராஜு எம்எல்ஏ ஆகியோா் மனு அளித்தனா்.
Published on

அதன் விவரம்: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டு, தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மாதம் நடைபெறும் இப்பணியில் பிஎல்ஓ-க்கள் அரசியல் கட்சி சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள பிஎல்ஏ-க்களிடம் ஒரு நாளைக்கு 50 விண்ணப்ப படிவத்தை வாக்காளா்களிடம் இருந்து பூா்த்தி செய்து பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும், எஸ்.ஐ.ஆா்.-இன் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும்; அதில் எவ்வித குளறுபடியும் நிகழக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனு அளிக்கும் நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், முன்னாள் எம்எல்ஏ மோகன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஆறுமுக நயினாா், மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா.சுதாகா், மாவட்ட ஜெ.பேரவைச் செயலா் விஜயகுமாா், எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் எம்.பெருமாள், மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com