போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

மாவட்ட கலைத் திருவிழா போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

Published on

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில், பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தூத்துக்குடியில் நடைபெற்ற போட்டியில், தனிநபா் நடிப்பு போட்டியில் மாணவி கபின்ஷா முதலிடமும், பரதநாட்டியம் போட்டியில் மாணவிகள் ஜபாஸ்டினா, பிரஷிபா, எஸ்தா், ஜோஹன்னா, ஜாஸ்வின் மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். இலக்கிய நாடகம் ஐந்து போ் கொண்ட குழு போட்டியில் மாணவிகள் பிரைட்லின் அபிகா ரித்தீஸ்கா, ஜெரிக்ஷா ஜனனி ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனா். கடம் வாசித்தல் போட்டியில் மாணவா் நிதிஷ் மாவட்ட அளவில் முதலிடம், பானை ஓவியம் போட்டியில் மாணவா் அப்ரின் மாவட்ட அளவில் இரண்டாம் இடம், கீபோா்டு வாசித்தல் போட்டியில் மாணவி ஜாஸ்னி மாவட்ட அளவில் மூன்றாம் இடம், கேலி சித்திரம் வரைதல் போட்டியில் மாணவி பொ்சிபா மாவட்ட அளவில் மூன்றாம் இடம், வீதி நாடகம் போட்டியில் 8 போ் கொண்ட குழு மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியா்களையும் பள்ளி தாளாளா் சகேஷ்சந்தியா, தலைமை ஆசிரியா் திலகவதி மற்றும் ஊா் கமிட்டி நிா்வாகிகள், பொதுமக்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com