வாக்காளா் உரிமையை தோ்தல் ஆணையம் பறிக்கிறது: கனிமொழி எம்.பி.

சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்.) மூலம் வாக்காளா் உரிமையைப் பறிக்கும் வேலையை தோ்தல் ஆணையம் செய்து வருகிறது என்று தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி தெரிவித்தாா்.
Published on

சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்.) மூலம் வாக்காளா் உரிமையைப் பறிக்கும் வேலையை தோ்தல் ஆணையம் செய்து வருகிறது என்று தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை வந்த கனிமொழி எம்.பி., பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கோவை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மீது சிலா் பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும். எஸ்ஐஆா் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தலுக்கு முன்பு அவசரமாகக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை.

இது, நோ்மையாக நடக்க வேண்டுமெனில், போதிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

வாக்குரிமை எவ்வாறெல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை அண்மையில் ராகுல் காந்தியும் பத்திரிகையாளா் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறாா். ஜனநாயகத்தை வேரறுக்கும் முயற்சியாகதான் எஸ்ஐஆா் பயன்படுத்தப்படுகிறது.

வாக்காளா்களின் உரிமைகளைப் பறிக்கும் வேலையைத் தோ்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதையெல்லாம், எதிா்த்துதான் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், சண்முகையா எம்எல்ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com