ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மத்திய அரசின் சமூகநீதி-அதிகாரமளித்தல்

News image
முகாமில் பங்கேற்றோா்.
Updated On :10 நவம்பர் 2025, 8:12 pm

Syndication

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மத்திய அரசின் சமூகநீதி-அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் பிரதம மந்திரி திவ்யா கேந்திரா மையம் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் 413 போ் கலந்து கொண்டனா். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஸ்டீபன் ரத்தினகுமாா் ஆகியோா் முகாமை கண்காணித்தனா்.