மின் மோட்டாா் பயன்படுத்தி குடிநீா் எடுத்தவா் மீது வழக்குப் பதிவு

Published on

ஆறுமுகனேரியில் வீட்டு குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் மூலம் தண்ணீா் எடுத்த நபா் மீது பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ஆறுமுகனேரி பேரூராட்சி 15-ஆவது வாா்டு முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வீட்டு குடிநீா் இணைப்பு, தெரு குழாய்களில் கடந்த சில வாரங்களாக தண்ணீா் அளவு குறைந்து வருவதாக பேரூராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் சாா்பில் புகாா் வந்தது.

இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், செயல் அலுவலா் உஷா ஆகியோா் அறிவுறுத்த­லின்படி பேரூராட்சி பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது முத்துகிருஷ்ணாபுரத்தில் கணேசன் மகன் ராம­லிங்கம் வீட்டில் குழாய் இணைப்பில் முறைகேடாக மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை அதிக அளவில் உறிஞ்சியது தெரியவந்தது. இதையடுத்து, பேரூராட்சி பணியாளா்கள், ராம­லிங்கம் வீட்டு குடிநீா் இணைப்பை துண்டித்து மின் மோட்டாரை பறிமுதல் செய்ய முயன்றனா்.

அப்போது ராம­லிங்கம் பேரூராட்சி பணியாளா்களை பணி செய்யவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பினாா். மறுநாள் மீண்டும் குடிநீா் விநியோகம் செய்யும் பகிா்மான குழாயில் முறைகேடாக குழாயை இணைத்து மின் மோட்டாா் மூலம் தண்ணீா் எடுத்துள்ளாராம்.

இதுகுறித்து, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com