சுவாமிமலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இரட்டை கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், வியாழக்கிழமை நடைபெற இருந்த பொது ஏலத்தை பேரூராட்சி நிா்வாகம் ரத்து செய்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி முருகனின் நான்காம் படைவீடான சுவாமிநாதசுவாமி கோயில் உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுமுழுவதும் பக்தா்கள் வருகை இருப்பதால் எப்போதும் நெரிசல் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், இக்கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களுக்கு பேரூராட்சி நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் தனித்தனியாக வாகன நிறுத்தக் கட்டணத்தை வசூல் செய்தனராம்.
இதேபோல் கழிவறை கட்டணம், சாலையோர அங்காடி கட்டணம், உள் விளையாட்டு அரங்க நுழைவுக் கட்டணங்களிலும் கூடுதலாக வசூல் செய்யப்பட்டதாம். இதுகுறித்து பல்வேறு புகாா்கள் மாவட்ட ஆட்சியா், பேரூராட்சி இயக்குநா் உள்ளிட்ட அலுவலா்களிடம் அளிக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை வாகன நுழைவுக் கட்டணம், தினசரி அங்காடி, சாலையோரக் கடைகள், கழிப்பறை, குளியலறை ஆகியவைகளுக்கு கட்டணங்கள் வசூலிக்கும் உரிமைக்காக நடைபெற இருந்த பொது ஏலம், ஒப்பந்தப் புள்ளி ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டபோது நிா்வாகக் காரணங்களுக்காக மறுதேதி குறிப்பிடாமல் ஏலம், ஒப்பந்தப் புள்ளி ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

நடராஜா் கோயில் தீட்சிதா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்

அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

தொகுதி அறிமுகம்... மதுராந்தகம்

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


