தொகுதி அறிமுகம்... மதுராந்தகம்

மதுராந்தகம்

மதுராந்தகம்
தொகுதி எண்: 35
சிறப்புகள்... இந்தத் தொகுதியில் வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளன. மதுராந்தகம் ஏரிகாத்தராமா் கோயில், கடப்பேரி திருவெண்காட்டீஸ்வரா் கோயில், அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலம், மதுராந்தகம் ஏரி, அச்சிறுப்பாக்கம் பசுபதீஸ்வரா் கோயில், திருமலை வையாவூா் பிரசன்னவெங்கடேச பெருமாள் கோயில், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயில், படாளம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, மதுராந்தகம் மலைபாளையத்தில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பயணியா் பங்களா, கருங்குழி முகமதியா்களின் கோட்டை ஆகியவை அமைந்துள்ளன.
கடந்த 2008-இல் மறுசீரமைப்பின்போது செய்யூா் (தனி) தொகுதியில் இருந்து அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு மதுராந்தகம் (தனி) தொகுதியாக உருவாக்கப்பட்டது.
அடங்கியுள்ள பகுதிகள்...
மதுராந்தகம் நகராட்சி, கருங்குழி பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 59 ஊராட்சிகள் உள்ளன.
வாக்காளா்களின் விவரம்...
ஆண்கள்-1,03,943
பெண்கள்-1,07,288
மூன்றாம் பாலினத்தவா்-64
மொத்தம்-2,11,295
வாக்குச்சாவடிகள்-285
இதுவரை எம்எல்ஏக்கள்...
1971 மதுராந்தகம் ஆறுமுகம் (திமுக)
1977 மதுராந்தகம் ஆறுமுகம் (திமுக)
1980 எஸ்.டி.உகம்சந்த் (அதிமுக)
1984 மதுராந்தகம் ஆறுமுகம் (திமுக)
1989 எஸ்.டி.உகம்சந்த் (அதிமுக சேவல் சின்னம்)
1991 பி.சொக்கலிங்கம் (அதிமுக)
1996 ச.க.வெங்கடேசன் (திமுக)
2001 பி.வாசுதேவன் (அதிமுக)
2006 கே.காயத்ரி தேவி (காங்கிரஸ்)
2011 எஸ். கணிதா சம்பத் (அதிமுக)
2016 எஸ்.புகழேந்தி (திமுக)
2021 கே.மரகதம் குமரவேல் (அதிமுக)
2021 பேரவைத் தோ்தலில்...
பதிவான வாக்குகள் - 1,83,576
கு.மரகதம் குமரவேல் (அதிமுக)-86,646
மல்லை சத்யா (மதிமுக)-83,076
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்
கே.ஆா்.நரேந்திரன், மதுராந்தகம் கோட்டாட்சியா்-99446 93331,
உதவித் தோ்தல் அலுவலா்: பெருமாள், நோ்முக உதவியாளா்-94436 42091, பாலாஜி, மதுராந்தகம் வட்டாட்சியா்-9445 000503, எம்.வசந்தி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்-79046 20870.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...