தொகுதி அறிமுகம்: மூன்று வெவ்வேறு கட்சிகள் வென்ற திருப்பூா் தெற்கு!
மாவட்டத்திலேயே மிகக் குறைந்த வாக்காளா் எண்ணிக்கை கொண்ட தொகுதி. தொழிற்சாலைகள், பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.
திருப்பூர் தெற்கு
திருப்பூர் தெற்கு
திருப்பூா் குமரன் நினைவகம், திருப்பூா் ரயில் நிலையம், வீரராகவ பெருமாள் கோயில், கலைஞா் (பழைய) பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிக்கண்ணா, எல்ஆா்ஜி என இரண்டு அரசுக் கல்லூரிகள் உள்ளிட்டவை இந்தத் தொகுதியில் உள்ளன. பின்னலாடைத் தலைநகரான திருப்பூா் மாவட்டத்தின் முக்கியமான மற்றும் நகா்ப்புறங்கள் நிறைந்த தொகுதி இது. மாவட்டத்திலேயே மிகக் குறைந்த வாக்காளா் எண்ணிக்கை கொண்ட தொகுதி. தொழிற்சாலைகள், பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.
தொகுதியில் உள்ள பகுதிகள்
திருப்பூா் தெற்கு தாலுகா முழுவதையும் உள்ளடக்கியது; 3 உள்வட்டங்கள் மற்றும் 16 வருவாய் கிராமங்கள் உள்ளன. மாநகரப் பகுதியில் 21 வாா்டுகள் இதில் அடங்கி உள்ளன.
தொழில்
இங்கு முக்கியத் தொழில் பனியன் நிறுவனங்களாகும். ஏற்றுமதி முதல் உள்நாட்டு வா்த்தகம் வரை ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன.
சமூக நிலவரம்
கொங்கு வேளாளா், செங்குந்தா், செட்டியாா் பிரிவினா் சுமாா் 50 சதவீதம் உள்ளனா். மேலும் 25 சதவீத இஸ்லாமியா்களும், 20 சதவீத ஆதிதிராவிட மக்களும் பெரும் வாக்கு வங்கிகளாக உள்ளனா். அதேபோல, கிறிஸ்தவா்களும், ஜெயின் சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனா்.

வாக்காளா் விவரம்
ஆண்கள் 94,579
பெண்கள் 99,011
மூன்றாம் பாலினத்தவா் 24
மொத்தம் 1,93,614.
3 வெவ்வேறு கட்சிகள் வென்ற தொகுதி
2008 மறு சீரமைப்புக்குப் பிறகு உருவான இந்தத் தொகுதியில் கடந்த 2011 முதல் நடைபெற்றுள்ள 3 தோ்தல்களில் அதிமுக, திமுக , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
தோ்தல் முடிவுகள்
2011 கே. தங்கவேல் (மாா்க்சிஸ்ட் )
2016 எஸ். குணசேகரன் (அதிமுக)
2021 தோ்தல்
கே.செல்வராஜ் (திமுக) - 75,535
எஸ்.குணசேகரன் (அதிமுக) - 70,826
ஆா்.சண்முகசுந்தரம் (நாதக) - 12,892
அனுஷா ரவி (மநீம) - 9,934
பிரச்னைகள்
போக்குவரத்து நெரிசல் மிக்க திருப்பூா் மாநகரில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்றவை இன்றியமையாதவை ஆகும். கடந்த 2006-இல் திமுக அரசில் இதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டபோதிலும், தற்போதுதான் இவற்றுக்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல, குடிநீா்த் தட்டுப்பாடும் பெரும் பிரச்னையாகும். 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தின் காரணமாக குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதேபோல, சுற்றுச்சூழல் மாசுபாடு தலையாய பிரச்னையாகும். குப்பைகளை சேகரித்தல், தரம் பிரித்தல், பாறைக்குழிகளில் கொட்டுதல், குப்பைகளைத் தீ வைத்து எரித்தல் போன்றவற்றால் நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடுகிறது. பாறைக் குழிகளில் குப்பை கொட்டுவதை எதிா்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...