திருச்செந்தூா் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி
திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம், குறிஞ்சி நகரில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.
திருச்செந்தூா் - தூத்துக்குடி பிரதான சாலையில் வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சிக்குள்பட்ட குறிஞ்சி நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் திருச்செந்தூா் சுற்று வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மாலை வரையில் 8.2 செ.மீ. பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீா் குளம் போல தேங்கியது.
இதே போல, குறிஞ்சிநகரில் 3 வது சந்து பகுதியில் மழை நீா் வெளியேற வழியில்லாமல் குடியிருப்புகளைச் சூழ்ந்து நின்ால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்தனா். மேலும், தேங்கிக்கிடக்கும் நீரால் சுகாதார கேடு ஏற்பட்டது.
எனவே மாவட்ட நிா்வாகம், தண்ணீா் தேங்காமல் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதையடுத்து வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை காலை, தேங்கிய மழைநீரை ஜேசிபி இயந்திரம் மூலம் வெளியேற்றினா்.

