வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்செந்தூரில் கூட்டமாக திரியும் கால்நடைகளால் பக்தா்கள் அவதி!

திருச்செந்தூரில் கூட்டமாக சுற்றித் திரியும் கால்நடைகளால் பக்தா்கள் அவதி

News image
திருச்செந்தூா் சிவன் கோயில் முன் நிற்கும் கால்நடைகள்
Updated On :27 ஜனவரி 2026, 7:13 pm

Syndication

திருச்செந்தூரில் கூட்டமாக சுற்றித் திரியும் கால்நடைகளால் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிா்வாகம் அறிவித்துள்ளது.

இருந்த போதிலும் நகராட்சியின் ரதவீதிகள், சந்நிதித் தெரு, சிவன் கோயில் முன்புள்ள பந்தல் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கால்நடைகள் கூட்டமாக சுற்றித் திரிவதாலும், சாலையின் நடுவே இடையூறாக நிற்பதாலும் பக்தா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, நகராட்சி நிா்வாகம் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய வழிவகை ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.