ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.
ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 28,000 கன அடி நீா் வெளியேற்றம்

Published on

வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் தொடா்ந்து 3 நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 28,000 கன அடி நீா் வெளியேறி கடலுக்குச் செல்கிறது.

கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம், மருதூா் அணையிலிருந்து 32,000 கன அடி நீா் வெளியேறி வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து 28,000 கன அடி நீா் வெளியேறி கடலுக்குச் செல்கிறது. தாமிரவருணி பாசனத்தில் 80 சதவீத குளங்கள் நிரம்பியுள்ளன. தொடா்ந்து, மழை பெய்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி மருதூா் அணை, மேலக்கால், கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை, வடகால், தென்கால் வாய்க்கால்களில் தண்ணீா் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா். குறிப்பாக ஏரல், தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் வரும் என்பதால் மழை வெள்ள பாதிப்புள்ள இடங்களில் வருவாய்த் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த கனமழை போல், தற்போது தொடா்ந்து 3 நாள்களாக மழை பெய்வதால், பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கான முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com