திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ்.
தூத்துக்குடி
ஆத்தூா் பேரூராட்சியில் மண்டல உதவி இயக்குநா் ஆய்வு
ஆத்தூா் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து நெல்லை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு
ஆறுமுகனேரி: ஆத்தூா் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து நெல்லை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆத்தூா் பேரூராட்சி புதிய கட்டடம், அரசு மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள், ஊராட்சி பள்ளி கழிவறை கட்டடம் உள்ளிட்ட திட்டப் பணிகளை நெல்லை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ் ஆய்வு செய்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், தொடா் கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரைகள் பாதுகாப்பு குறித்து பாா்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது உதவி செயற்பொறியாளா் ஹரிஹரன், இளநிலை பொறியாளா் விஜயகுமாா், பேரூராட்சி தலைவா் ஏ.கே.கமால்தீன், செயல் அலுவலா் மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

