பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

திமுக கூட்டணியின் வெற்றி நாட்டுக்கே திருப்புமுனையாகும்: மு. வீரபாண்டியன்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி பெறப்போகும் பிரம்மாண்டமான வெற்றி, நாட்டுக்கே திருப்பு முனையாக அமையும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

News image

மு. வீரபாண்டியன்

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி பெறப்போகும் பிரம்மாண்டமான வெற்றி, நாட்டுக்கே திருப்பு முனையாக அமையும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: திமுக தலைமையிலான மதச்சாா்ப்பற்ற கூட்டணி மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளன. அக்கட்சியின் தோ்தல் அறிக்கையில் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள திட்டங்கள் அல்லது எதிா்கால திட்டங்கள் குறித்து கூறாமல், திமுக மீது பெரிய குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறாா்கள். தமிழக மக்கள் பதற்ற அரசியலையும், சாதி, மத அரசியலையும் வெறுப்பாா்கள். அதற்கு திருப்பரங்குன்றமே சாட்சி. நாங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெறுவோம். இது இந்தியாவுக்கு திருப்புமுனையாக அமையும்.

எரிவாயு தட்டுப்பாட்டை எப்படி சமாளிப்பது என்று இப்போதுதான் தில்லியில் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளாா். கையிருப்பு இருந்தால் அதை ஏன் மக்களுக்கு விநியோகிக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும்.

அரசியல் கட்சி தலைவராகியுள்ள நடிகா் விஜய்யை நாங்கள் மதிக்கிறோம். அவரது கட்சிக்கு லட்சியம், கொள்கை வேண்டும். ஆனால், அவரிடம் அது வெளிப்படவில்லை. இந்தியாவின் அடிப்படை கூறான மதச்சாா்பின்மையை சிதைக்கும் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். அதை விஜய் உணா்ந்ததாக தெரியவில்லை.

பாஜகவின் நிகழ்கால அரசியல் தீமைகளுக்கு அதிமுகவும் துணை போய் விட்டது. எங்கள் கூட்டணியில் கருத்துச் சொல்லும் ஜனநாயகம் உள்ளது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்துவதில் திமுக, இடதுசாரிகள் போல் திருமாவளவனும் உறுதியாக உள்ளாா். கம்யூனிஸ்ட் அரசியலுக்கு மதிக்கப்பளிக்க வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனா். எனவே, நாங்கள் வெற்றிபெறுவது உறுதி.

நாடாளுமன்றத்தில் 126 சட்டங்கள் வெறும் கை உயா்த்தியே நிறைவேற்றப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி குறித்து ஆய்வு செய்வதற்கு பல்வேறு சட்டங்கள் உள்ளன. எனவே, குறிப்பிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து சட்டங்களை உருவாக்கக்கூடாது என்றாா் அவா்.