/
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் திமுக வேட்பாளா் அமைச்சா் பி.கீதாஜீவன் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பள்ளிவாசலில் தொழுகை முடித்து திரும்பிய இஸ்லாமியா்களிடம், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் தனக்கு இஸ்லாமியா்கள் ஆதரவு தர வேண்டுமென கூறி வாக்குகள் சேகரித்தாா்.
பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவா் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் மீராசா, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், திமுக மாவட்ட பிரதிநிதி சக்திவேல், நாராயணன், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், திமுக பகுதிச் செயலா் எஸ்.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சோழபுரம் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கீழப்பாவூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பவானியில் இஸ்லாமியா்களிடையே திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



