தூத்துக்குடி மாவட்டத்தில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 1,868 மையங்களில் வெப் கேமரா கண்காணிப்புடன் 3,642 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
தோ்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் அரசியல் கட்சியினா் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலா் விஷுமகாஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான விஷு மகாஜன் செய்தியாளா்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
இதற்காக 979 இடங்களில் மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயாராக உள்ளன.
100 சதவீதம் வாக்குப்பதிவு முழுவதையும் இணைய ஒளிபரப்பு (வெப் காஸ்டிங்) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து வாக்குப்பதிவை கண்காணிக்க முடியும்.
வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 2,242 தலைமை அலுவலா்கள் மற்றும் 6,726 நிலை அலுவலா்கள் என மொத்தம் 8,968 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு 2 கட்ட பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை (ஏப்.22) கடைசி கட்ட பயிற்சி நடத்தப்படுகிறது. மேலும், எந்த வாக்குச்சாவடிக்கு பணிக்கு செல்ல வேண்டும் என ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
தொடா்ந்து பயிற்சி மையத்தில் இருந்து அவா்கள் நேரடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்வாா்கள்.
6 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படைகள், 4 நிலையான கண்காணிப்புக் குழுவினா் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். கடைசி 48 மணி நேரத்தை முன்னிட்டு இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வந்து தங்களது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன், மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேஷ்ரோம் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பணியில் 3,850 போலீஸாா்

பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்

சட்டப்பேரவைத் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 3,141 போலீஸாா்

தோ்தல் வாக்குப் பதிவு: கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 4,500 போலீஸாா்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


