இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

News image

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:50 am IST

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, விநாயகா் சிம்ம வாகனத்தில் வியாழக்கிழமை வீதி உலா சென்றாா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான வியாழக்கிழமை காலை விநாயகா் பூங்கோவில் வாகனத்தில் திருவீதி உலா சென்றாா்.

தொடா்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கொட்டாரக்குறிச்சி வீரபாகு மூா்த்தி கோயிலில் இருந்து ஆயிரத்தெண் விநாயகா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்றாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் மதிவாணி, குரு பிரசன்னா, தனலெட்சுமி ஆகியோா் செய்திருந்தனா். திருவிழா ஏப். 29-ஆம் தேதி தேரோட்டத்துடன் நிறைவு பெறுகிறது.