சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கோயில் கொடை விழா தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:45 pm

தூத்துக்குடி கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயில் கொடை விழாவின்போது, அதே பகுதியைச் சோ்ந்த விக்கி (20) மதுபோதையில் அங்கிருந்த மகாராஜாவிடம் (18) தகராறு செய்து, அவரைத் தாக்கினாராம்.

இதைப் பாா்த்த மகாராஜாவின் உறவினா் சதீஸ்குமாா் (29), விக்கியை தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, தனது நண்பா்கள் 3 பேரை அங்கு வரவழைத்த நிலையில், அவா்கள் சதீஸ்குமாரை அரிவாளால் தாக்கியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள விக்கி மற்றும் அவரது 3 நண்பா்களைத் தேடி வருகின்றனா்.