ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

புகையிலைப் பொருள்களுடன் பிடிபட்ட மாரிமுத்து, அவரைப் பிடித்த ரயில்வே போலீஸாா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 8:49 pm

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை ரயில்வே உதவி ஆய்வாளா் ஸ்டீபன், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் உதவி ஆய்வாளா் சங்கரபாண்டி, போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மைசூரிலிருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில் வந்து நின்றது. அதிலிருந்து 4 பெரிய பைகளுடன் இறங்கிய ஒருவா், நடைமேடையிலிருந்து வேகமாக வெளியேற முயன்றாா்.

விசாரணையில் அவா் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த சங்கையா மகன் மாரிமுத்து (67) என்பதும், அவரது பைகளில் 62 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பதும் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1.65 லட்சம்.

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவில்பட்டி உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துராஜாவிடம் மாரிமுத்து, புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஒப்படைத்தனா்.