நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயி­லில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரில் எழுந்தருளிய ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:18 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயி­லில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் சிறப்பு வழிபாடுகளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு தோ்கடாட்சம் மற்றும் தேரடி மாடசாமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதன்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9மணிக்கு ஆயிரத்தெண் விநாயகா் திருத்தேரில் எழுந்தருளியதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

தோ் நிலையம் வந்தடைந்த பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா் விஸ்வகுமாா், திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

 ஆறுமுகமங்கலம் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

ஆறுமுகமங்கலம் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.