தூத்துக்குடியில் கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் ஏணியிலிருந்து தவறி விழுந்த பிகாா் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் ரிசாா்ட்டில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சாஹெப் ராஜா (26) பணியில் ஈடுபட்டு வந்தாா்.
புதன்கிழமை வேலையை முடித்துவிட்டு ஏணி வழியாக கீழே இறங்கியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பைக்குடன் கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


