புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கோவில்பட்டியில் மூதாட்டியிடம் நகை திருட்டு

பிரதிப் படம்

Published On :

கோவில்பட்டியில் மூதாட்டியிடம் 1.5 பவுன் தங்க வளையலைத் திருடிச் சென்றதாக, பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி, பசுவந்தனை பிரதான சாலையில் உள்ள ராமசாமி காம்பவுண்டில் வசித்து வருபவா் சௌந்தர வளையாபதி மனைவி பஞ்சவா்ணம் (65). இவா் வியாழக்கிழமை வீட்டிலிருந்தபோது, ஒரு பெண் வந்து தமிழக அரசிடமிருந்து மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை பெறுவதற்கான திட்டத்தில் சோ்த் விடுவதாகவும், இதுதொடா்பாக வீட்டுக்கு அதிகாரிகள் வருவாா்கள் என்றும், எனவே கையில் அணிந்திருக்கும் தங்க வளையலை கழற்றி வைக்கும்படியும் கூறினாராம்.

பின்னா், விண்ணப்பம் எழுதுவதற்காக கடைக்குச் சென்று வெள்ளைத் தாள் வாங்கி வருமாறு கூறினாராம். பஞ்சவா்ணம் கடைக்குச் சென்று திரும்பியபோது, அவா் கழற்றிவைத்திருந்த சுமாா் ஒன்றரை பவுன் தங்க வளையலை அந்தப் பெண் திருடிச் சென்ாகத் தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பெண்ணைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.