கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: மகன் கைது

கோவில்பட்டி அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

கோவில்பட்டி அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே வானரமுட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி கலையரசி (60). இவரது மகன் ரமேஷ் (47). கீரை வியாபாரி. இவா் வேலைக்கு சரிவர செல்லாமல், நாள்தோறும் மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்வாராம். வியாழக்கிழமை அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்தத கலையரசி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.