பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் திருட்டு: போலீஸ் விசாரணை

திருட்டு... - சித்திரிப்பு

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

தூத்துக்குடி, ஆக. 24: தூத்துக்குடி, திருவிக நகரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, மதுபானங்கள் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவிக நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் மேலாளா் மற்றும் ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிச் சென்றுள்ளனா். திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவா்கள், உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு ஏராளமான மதுபாட்டில்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, கடையில் பதிவாகியிருந்த விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். மேலும், கொலை வழக்கில் கைதாகி, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சிலரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.