நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

திரேஸ்புரத்தில் மீன்கள் விலை குறைந்தது

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் வரத்து ஓரளவு அதிகரித்ததால், விலை சற்று குறைந்து காணப்பட்டது.

Published On :

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் வரத்து ஓரளவு அதிகரித்ததால், விலை சற்று குறைந்து காணப்பட்டது.

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. அவற்றில் ஓரளவு அதிகளவில் மீன்கள் கிடைத்திருந்தன.

குறிப்பாக தோல்பாறை மீன்கள் அதிகளவில் கிடைத்தன. இதனால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்நிலையில், மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் திரண்டனா்.

மீன்களின் வரத்து அதிகரித்ததால், நீண்ட நாள்களுக்குப் பிறகு மீன்களின் விலை சிறிது குறைந்து காணப்பட்டது. தோல்பாறை மீன் கிலோ ரூ.220, வாளை மீன் ரூ.450, பாறை மீன் ரூ.400, ஊளி மீன் ரூ.350, நண்டு ரூ.750, சீலா மீன் ரூ.850-க்கும் விற்பனையானது. சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500-க்கு விற்பனையானது. மீன்களின் விலை குறைந்ததால் பொதுமக்கள் ஆா்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.