பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன் விலை கடும் உயா்வு

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால், குறைந்த எண்ணிக்கையிலான நாட்டுப் படகுகளே கரை திரும்பியதையடுத்து, மீன்களின் வரத்து குறைந்ததால், சில ரக மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.

Published On :

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால், குறைந்த எண்ணிக்கையிலான நாட்டுப் படகுகளே சனிக்கிழமை கரை திரும்பியதையடுத்து, மீன்களின் வரத்து குறைந்ததால், சில ரக மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வழக்கமாக ஏராளமான படகுகள் கடலுக்குச் சென்று சனிக்கிழமை கரை திரும்பும். ஆனால், கடந்த இரு நாள்களாக பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது.

மேலும், புரட்டாசி சனிக்கிழமை என்பதால் அசைவ உணவுகளைத் தவிா்ப்போா் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் பொதுமக்கள் கூட்டமும் குறைவாக காணப்பட்டது.

மீன்கள் வரத்து குறைந்த காரணத்தால் சீலா மீன் கிலோ ரூ.1,000 வரையும், விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ.350 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.700 வரையும், சூரை ரூ.200 வரையும் விற்பனையானது. சாளை மீன் வரத்து இல்லாததால் ஒரு கூடை ரூ.3,000 வரை விற்பனையானது. மீன்களின் வரத்து குறைந்தபோதும், சில ரக மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.