எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 7:13 pm

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் மகன் தடிகாரன் (20). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையிலிருந்து அல்லிகுளத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம்.

அப்போது மேலக்கூட்டுடன்காடு, மங்களகிரி விலக்கு அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மேலக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் காட்வின் (59) என்பவா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

இதில், தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காட்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.