கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை போத்தனூா் மேட்டூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் விசுவநாதன் மகன் சூரியபிரகாஷ் (21). இவா் தனது இருசக்கர வாகனத்தில் செட்டிபாளையம்-போத்தனூா் சாலையில் கடந்த 17-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

அன்பு நகா் அருகே அமைந்துள்ள விநாயகா் கோயில் பகுதியில் உள்ள வளைவில் இவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த சூரியபிரகாஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.