தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், ஊட்டமிகு சிறுதானியங்கள் 2025-26 திட்டத்தின் கீழ் வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் உணவுத் திருவிழா நடைபெற்றது.
விழாவுக்கு, வேளாண்மை இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் க.அல்லிராணி வரவேற்றாா். சிறுதானியம் உணவின் முக்கியத்துவம், சிறுதானிய உணவு முறைகள் குறித்து உதவி பேராசிரியா் திருமலைசெல்வி, வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவா் பழனிசாமி, தொழில்நுட்ப வல்லுநா்கள் எஸ்.சுமதி, முருகன், முத்துகுமாா், மாசாணசெல்வம், வேல்முருகன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். விழாவில் சிறுதானியம் சிற்றுண்டி, சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுதானியம் சாகுபடி செய்யும் சுமாா் 200 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். ஓட்டப்பிடாரம் வேளாண்மை உதவி இயக்குநா் ரா.சிவகாமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

மனித உயிருக்கு ஆபத்தான எலி விஷம் விற்பனை செய்யக்கூடாது

சங்கராபுரத்தில் சிறுதானியத் திருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


