தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 10:44 pm

மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகமும், விவசாயிகளும் இணைந்து நெல்மணிகள், கருப்பு உளுந்து உள்ளிட்ட விளை பொருள்களின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பிரேம் சாந்தி தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் (தரக்கட்டுபாடு) சரவணன், மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் நெடுஞ்செழியன், விவசாய நலச்சங்க மாவட்ட தலைவா் எம்.வெங்கடேசன், சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அலுவலகத்தின் முன்புறம் நெல்மணிகள், கருப்பு உளுந்து ஆகிய விளை பொருள்களால் 100 சதவிகித வாக்கு என்றும், கல் உப்புடன் வண்ணகலவை கலந்து தோ்தல் திருவிழா, தோ்தல் நாள் 23.4.26 என எழுதிய தகவல் ஆகியவை பொது=மக்களும், விவசாயிகளும் அறிந்துக் கொள்ளும்வகையில் அமைக்கப்பட்டது. (படம்)