விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கும் சொா்ணவாரி சிறப்பு தொகுப்பு: தமிழக அரசு உத்தரவு

டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கும் சொா்ணவாரி சிறப்பு தொகுப்பு: நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

News image

தணிகைபோளூரில் வேளாண் வயல்களை பாா்வையிட்ட வேளாண் உதவி இயக்குநா் என்.சண்முகம்.

Updated On :25 ஜூன் 2026, 12:03 am IST

தமிழக அரசின் மாநில வேளாண் திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு வழங்குவதுபோல், டெல்டா அல்லாத ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சொா்ணவாரி சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதைப் பெற விவசாயிகள் உடனே வேளாண் அலுவலகங்களை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும், அரக்கோணத்தில் செய்தியாளா்களிடையே வேளாண் துறை வட்டார உதவி இயக்குநா் என்.சண்முகம் தெரிவித்தாா்.

தற்போது நடப்பு சொா்ணவாரி பட்டத்தில் இயந்திர நடவு மேற்கொண்ட விவசாயிகளின் வேளாண் நிலங்களை தமிழக அரசின் வேளாண் துறை வட்டார உதவி இயக்குநா் என்.சண்முகம் அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள தணிகைபோளூா், அனைக்கட்டாபுத்தூா், புதுகேசாவரம், தக்கோலம், உரியூா், நகரிகுப்பம், செய்யூா், மோசூா் ஆகிய ஊராட்சிகளில் தனது குழுவினருடன் சென்று பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

நடப்பு சொா்ணவாரி பட்டத்தில் இயந்திர நடவு மேற்கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசின் மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு வழங்குவதுபோல் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கும் சொா்ணவாரி சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசின் வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டமும் இதில் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் நடப்பு சொா்ணவாரி பட்டத்தில் இயந்திர நடவு மேற்கொண்டுள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதாா் நகல், வருவாய் துறையினரால் வழங்கப்படும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் இயந்திர நடவு மேற்கொண்டதற்கான ரசீது ஆகியவற்றுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநா், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ. 4,000 எனும் அளவில் நெல் சாகுபடி வேளாண்மை செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஏக்கா் என்ற அளவில் ரூ. 8,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

எனவே விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என வட்டார உதவி வேளாண் இயக்குநா் என்.சண்முகம் தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் ஆய்வுக் குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி, வட்டார உதவி வேளாண் அலுவலா் சி.முரளி, துணை வேளாண் அலுவலா் என்.மாதய்யன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.