எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோவில்பட்டி என்இசி பேராசிரியைக்கு தேசிய விருது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு முனைவா் பட்ட ஆராய்ச்சிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

News image
நிகழ்வில் விருது மற்றும் சான்றிதழ் பெறும் உதவிப் பேராசிரியை வெ.அனிதா
Updated On :28 பிப்ரவரி 2026, 7:37 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு முனைவா் பட்ட ஆராய்ச்சிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

புது தில்லி, இந்திய தேசிய இளம் அறிவியல் அகாதெமி ,இந்திய தேசிய அறிவியல் அகாதெமி இணைந்து, முனைவா் பட்ட மாணவா்களுக்கான சாராண்ஷ் 2025 ஆய்வறிக்கைப் போட்டி கடந்த அக்டோபா் , நவம்பா் மாதங்களில் இணையவழியில் நடைபெற்றன.

இதில், நேஷனல் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியை வெ.அனிதா கலந்து கொண்டு தமது முனைவா் பட்ட ஆராய்ச்சி திட்ட ஆய்வறிக்கையை சமா்ப்பித்தாா். அவருடைய ஆய்வறிக்கை பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவில் தேசிய அளவில் 3ஆம் இடம் பெற்று சாராண்ஷ் ஆய்வறிக்கை விருது பெற்றது.

இவ்விருதுக்கான பாராட்டு விழா தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து புது தில்லி, இந்திய தேசிய அறிவியல் அகாதெமி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அவருக்கு அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து பங்கேற்றவா்களுடன் போட்டியிட்டு, இறுதிச்சுற்றுக்கு தோ்வு செய்யப்பட்ட 10 பேரில் ஒருவராக வெ.அனிதா தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளாா்.

அவரை கல்லூரித் தாளாளா் கே ஆா் அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல் உள்ளிட்டோா் பாராட்டினா்.