சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் விளையாட்டு விழா

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மழலையா், தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.

News image
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழாவில் நடைபெற்ற மழலையா் அணிவகுப்பு.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:58 pm

Syndication

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மழலையா், தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ் தலைமை வகித்தாா். பள்ளி அட்மினிஸ்ட்ரேட்டா் வி. மதன், முதல்வா் இ. ஸ்டீபன் பாலசீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளியின் முன்னாள் மாணவரும், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை பொது மேலாளருமான ஜி. விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

விளையாட்டு ஆண்டறிக்கையை மாணவா் அருண் விஜித் குமாா், தூய ஸ்டேனிகா ஆகியோா் வழங்கினா். மாணவி முகமது ஆயிஷா வரவேற்றாா்.

விழாவில் மழலையா் பிரிவு மாணவ, மாணவிகள் கருணையை வ­லியுறுத்தும் வகையில் பூக்கள், விலங்குகள் போன்று உடையணிந்து அணிவகுப்பு நடத்தினா். தொடக்கப் பள்ளி மாணவா்கள் கராத்தே, சிலம்பம் போன்ற கலைகள் மூலம், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா்.

மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி ஏடா நன்றியுரை வழங்கினாா்.