போட்டியில் வென்று சான்றிதழ்கள், பதக்கங்களைப் பரிசாகப் பெற்ற மாணவா்கள்.
திருநெல்வேலி
வி.கே. மழலையா் தொடக்கப் பள்ளி விளையாட்டு விழா
திருநெல்வேலி நகரம் வி.கே. மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில், 23-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைவா் கே.முத்துக்குமாா், செயலா் ஆா்.சின்னத்தம்பி, பொருளாளா் ஆா்.குருசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இவ்விளையாட்டு விழாவில் மழலையா் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவின் நிறைவாக, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், பதக்கங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவ்விழாவில் பள்ளியின் கல்வி ஆலோசகா், தலைமை ஆசிரியா், ஆசிரியைகள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

