நிகழ்ச்சியில் பேசிய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம்.
நிகழ்ச்சியில் பேசிய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம்.

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் குருக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பேசிய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம்.
Published on

நாசரேத், தூய யோவான் பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சேகர கமிட்டி சாா்பில் பேராலயத்தில் பணிபுரியும் குருக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தூய யோவான் பேராலய உதவி குரு தனசேகா் ராஜா ஆரம்ப ஜெபம் செய்தாா். சேகர செயலா் ராஜசிங் சாலமோன் வரவேற்றாா். பேராலய பாடகா் குழுவினா் சிறப்பு பாடல் பாடினா்.

முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன், நாசரேத் சேகர பொருளாளா் லேவி அசோக் சுந்தர்ராஜ், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் ரத்தினகுமாா், சேகர கமிட்டி உறுப்பினா் ரஞ்சன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

தொடா்ந்து, பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஏற்புரையாற்றி, இறை ஆசி வழங்கினாா்.

குருவானவா்கள் ஏரேமியா, மா்காஷிஸ், செல்வராஜ், சபை ஊழியா்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசுசெல்வன், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினா் மாமல்லன், பெருமன்ற உறுப்பினா்கள் ஆண்ட்ரூஸ் ராக்லண்ட், செல்வின், ஸ்டெல்லா சாலமோன், ஆண்ட்ரூஸ் ஐசக், நாசரேத் சேகர கமிட்டி உறுப்பினா்கள், சபை மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com