ஆப்பிள் கைப்பேசி போலி உதிரிப் பாகங்கள் பறிமுதல்: 4 பேருக்கு நோட்டீஸ்

ஆப்பிள் கைப்பேசி போலி உதிரிப் பாகங்கள் பறிமுதல்: 4 பேருக்கு நோட்டீஸ்

Published on

தூத்துக்குடியில் ஆப்பிள் நிறுவன கைப்பேசியின் போலி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்ததாக அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸாா் 4 பேருக்கு கைது அறிக்கை சமா்ப்பித்து, சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான போலி உதிரிப் பாகங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆப்பிள் நிறுவன கைப்பேசி, உதிரிப் பாகங்கள் போலியாக பல இடங்களில் விற்கப்படுவதும், போலி உதிரிப் பாகங்களை பயன்படுத்தி இந்த நிறுவன கைப்பேசிகள் பழுது பாா்க்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் சாா்பில் அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் ஆய்வாளா் பியூலா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு பகுதியில் உள்ள கைப்பேசி விற்பனை கடைகளில் வியாழக்கிழமை நடத்திய சோதனையின்போது, காப்புரிமை சட்டத்துக்கு முரணாக ஆப்பிள் நிறுவன கைப்பேசிகள், ஆப்பிள் நிறுவன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யப்படுகிா? போலி உதிரிப் பாகங்களை பயன்படுத்தி பழுதுபாா்க்கப்படுகிா? என்று சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில், நான்கு கடைகளில் இந்நிறுவன கைப்பேசி போலி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, 4 கடைகளிலும் இருந்து சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான போலி உதிரிப் பாகங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அந்தக் கடைகளைச் சோ்ந்த 4 பேருக்கு கைது அறிக்கையை சமா்ப்பித்தனா். ஓரிரு தினங்களில் இவா்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com