மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை

Updated On :25 பிப்ரவரி 2026, 10:14 pm

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (30). இவா் கோவை சிங்காநல்லூா் பகுதியில் உள்ள மெத்தை நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி. சாலையில் உள்ள ஒரு மதுக் கூடத்தில் ஆனந்துக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட சிலருக்கும் இடையே 2018 நவம்பா் 5-ஆம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஆனந்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தக் கொலை தொடா்பாக பொள்ளாச்சி நகர மேற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாா் (33), வின்சென்ட் (26), சிவமூா்த்தி (39), ஜெயக்குமாா் (19), விவின் தாஸ் (30), காா்த்திக் (எ) காளிதாஸ் (25) மற்றும் ஒரு சிறுவன் என 7 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ்குமாா் உள்ளிட்ட 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவகுமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் தொடா்புடைய சிறுவன் மீதான விசாரணை, சிறுவா் நீதிக் குழுமத்தில் தனியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.