எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நண்பரை அடித்துக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் பழிக்குப் பழியாக சமையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற கேரளத்தைச் சோ்ந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 7:21 pm

கோவையில் பழிக்குப் பழியாக சமையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற கேரளத்தைச் சோ்ந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கேரள மாநிலம், சாலக்குடியைச் சோ்ந்தவா் பென்னி (60). இவா் கடந்த 25 ஆண்டுகளாக கோவை காந்திபுரம் மற்றும் உப்பிலிபாளையம் பகுதிகளில் நடைபாதையில் தங்கி சமையல் வேலை மற்றும் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவரும், பொள்ளாச்சியைச் சோ்ந்த ராஜேஷ் (எ) ராஜேந்திரன் என்பவரும் நண்பா்களாக பழகி வந்தனா். இருவரும் அவ்வப்போது ஒன்றாக அமா்ந்து மது அருந்தி வந்தனா்.

கடந்த 17.09.2023 அன்று பிற்பகல் ராஜேஷும், அவரது நண்பா்களும் சமையல் வேலையை முடித்துவிட்டு மது அருந்தியுள்ளனா். மாலை 6.30 மணியளவில் கோவை ஆடிஸ் வீதியில் உள்ள ஒரு கடை அருகே பென்னியைச் சந்தித்துள்ளனா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பென்னி தன்னை இகழ்ந்து பேசியதாகக் கருதி ராஜேஷ் அவரைத் தாக்கியுள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த பென்னி, அன்றிரவு 8.30 மணியளவில் ஆடிஸ் வீதியில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஷை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது கைப்பேசியை திருடிக் கொண்டு தப்பினாா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சிவகுமாா் குற்றஞ்சாட்டப்பட்ட பென்னிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.