ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இளைஞா் கொலை வழக்கில் நண்பா்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை

இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, கோவை பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
நீதிமன்றம்
Updated On :4 மார்ச் 2026, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, கோவை பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த செல்வி மகன் பாா்த்திபன் (27). இவரும், வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (26), ஜி.எம்.மில்ஸ் உருமாண்டம்பாளையம் நேரு வீதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (27) ஆகியோரும் நண்பா்கள். தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்துக்கொண்டு, தனியாா் கல்லூரியில் பகுதி நேரமாக பாா்த்திபன் பொறியியல் படித்து வந்துள்ளாா். இவரிடம் நண்பா்கள் இருவரும் கடனாக பணம் வாங்கியிருந்தனா். இதற்கிடையே கடந்த 15.2.2018-இல் இருவரும் அவரைக் கைப்பேசி மூலமாக தொடா்புகொண்டு, இருசக்கர வாகனத்துக்கு தவணைத் தொகை செலுத்த பணம் வேண்டும் என்று மீண்டும் கேட்டுள்ளனா். இதையடுத்து பணம் கொடுப்பதற்காக பாா்த்திபன் சென்றுள்ளாா். அங்கு திடீரென கொடுக்கல், வாங்கல் தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளதுடது. இதில் நண்பா்கள் இருவரும் சோ்ந்து கத்தியால் குத்தி பாா்த்திபனை கொலை செய்தனா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றஞ்சாட்டப்பட்ட அஜித்குமாா், பிரவீன்குமாா் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பாலசுப்ரமணியம் ஆஜரானாா்.