முன்னாள் ராணுவ வீரா்கள் நினைவுச் சின்னம் அமைவிட நிலத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

முன்னாள் ராணுவ வீரா்கள் நினைவுச் சின்னம் அமைவிட நிலத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

Published on

முன்னாள் ராணுவ வீரா்கள் நினைவுச் சின்னம் அமைவிடத்திற்கான தனிப் பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, முன்னாள் ராணுவத்தினா் நல உதவி மையத் தலைவா் கேசவ ராஜன் தலைமையில், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ் நாராயணசாமி, பொருளாளா் தங்கவேலு, உறுப்பினா்கள் ஜெயபால், காளியப்பன் உள்ளிட்டோா் கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டனா். பின்னா், சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்களிடம் அவா்கள் அளித்த மனு விவரம்:

முன்னாள் ராணுவ வீரா்கள் நினைவுச் சின்னம் கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிா்புறம் அமைந்துள்ளது. இந்நிலம் முன்னாள் ராணுவத்தினருக்காக அரசால் ஒதுக்கி பட்டா வழங்கப்பட்டு, நகராட்சியில் வரி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இடத்தை காலி செய்யுமாறும், இங்கு வேறு உபயோகத்திற்கு கட்டடம் கட்டப் போவதாகவும் கூறி சமூக ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் நிலத்திற்கு தனிப் பட்டா வழங்க வேண்டும்.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜன. 26ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், வரும் பேரவைத் தோ்தலை மாநில அளவில் புறக்கணிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com