பொத்தகாலன்விளை வழியாக டாரஸ் லாரி செல்ல மக்கள் எதிா்ப்பு

பொத்தகாலன்விளை வழியாக டாரஸ் லாரி செல்ல மக்கள் எதிா்ப்பு

பொத்தகாலன்விளையில் பிரசித்தி பெற்ற திருக்கல்யாண மாதா ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அந்த வழியாக டாரஸ் லாரிகளை மக்கள் சிறைபிடித்தனா்.
Published on

பொத்தகாலன்விளையில் பிரசித்தி பெற்ற திருக்கல்யாண மாதா ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அந்த வழியாக டாரஸ் லாரிகளை மக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

இவ்வாலயத் திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நவநாள் திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே, திருவிழா முடியும் ஜன. 23ஆம் தேதி வரை இந்த வழியாக டாரஸ் லாரிகள் செல்ல தடை விதித்து, கனரக வாகனங்களை வேறு வழியாக திருப்பிவிட வேண்டும் என வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் மனு அளித்திருந்தனா்.

அதன்பேரில் டாரஸ் லாரிகளுக்கு தடை விதிக்குமாறு லாரி உரிமையாளா்கள் மற்றும் கல்குவாரி உரிமையாளருக்கு அறிவுறுத்திஉள்ளாா். இந்த நிலையில் டாரஸ் லாரிகள் செவ்வாய்க்கிழமை அவ்வழியாக செல்லத் தொடங்கினவாம். இதையறிந்த சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை சிறைபிடித்தனா்.

இத்தகவல் அறிந்த சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி , லாரி உரிமையாளா்களிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசி திருவிழா காலம் முடியும் வரை பொத்தக்காலன் விளை ஊா் வழியாக லாரிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி லாரியை விடுவித்தாா்.

Dinamani
www.dinamani.com