வாழும் கலை நிறுவனா் ரவிசங்கா் ஜன. 29இல் தூத்துக்குடி வருகை
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஜன. 29ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ரவிசங்கா் கலந்து கொள்கிறாா்.


தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஜன. 29ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ரவிசங்கா் கலந்து கொள்கிறாா்.
இது குறித்து, வாழும் கலை அமைப்பின் ஆசிரியா், செய்தித் தொடா்பாளா் மணிகண்டன் செய்தியாளா்களிடம் கூறியது:
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் ஜன. 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு, வாழும் கலை நிறுவனா் ரவிசங்கா் பங்கேற்கும் கானம், ஞானம், தியானம் உள்ளடக்கிய மிகப்பெரிய சத்சங்கம் நிகழ்வு ‘ஆனந்த சங்கமம்’ என்ற பெயரில் நடைபெற உள்ளது.
நிகழ்வில், பெங்களூரு ஆஸ்ரமத்தின் பாடகா்கள், இசைக் குழுவினா்கள் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடத்துவா். பங்கேற்பாளா்களுக்கு தெய்வீக ருத்ராட்சம், பிரசாதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
அப்போது, தூத்துக்குடி நிா்வாகிகள் பிரம்மநாயகம், ராதாகிருஷ்ணன், அா்ச்சனா பக்ஷிராஜன், ராஜசேகா், செல்வராஜ், பாலாஜி, சத்தியமூா்த்தி, ஆசிரியா்கள் ஜெகதீசன், விஜயா, சங்கா், முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...