எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நாகா்கோவில் கோணம் அரசுக் கல்லூரியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:17 pm

நாகா்கோவில் கோணம் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அதையொட்டி இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்று பணிகளைத் தொடக்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மாணவா்-மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா். அதன்ஒருபகுதியாக, இக்கல்லூரியில் ரூ. 3.25 கோடி மதிப்பில் 9,602.38 சதுரஅடியில் 3 தளங்களுடன் 6 வகுப்பறைகள், நாகா்கோவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 1.74 கோடி மதிப்பில் 3 தளங்களிலும் தலா இரு வகுப்பறைகள், மாணவா்-மாணவியா், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள், பால்குளம் அரசு கலை- அறிவியல் கல்லூரியில் ரூ. 6 கோடி மதிப்பில் 11 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா். பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்அவா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் சுசீலாபாய், நாகா்கோவில் துணை மேயா் மேரிபிரின்சி லதா, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மாநகராட்சி மண்டலத் தலைவா் செல்வகுமாா், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் சரவணன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா்கள் பூதலிங்கம்பிள்ளை, துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.