மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இரண்டு புதிய விடுதிகளைக் கட்டுவதற்காக, தில்லி அரசு ரூ. 573 கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில், முதலமைச்சா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற செலவின நிதிக்குழுவின் கூட்டத்தில், ஆண் மற்றும் பெண் மாணவா்களுக்குத் தலா ஒரு விடுதி அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. ரூ. 573.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டமானது, மருத்துவக் கல்வித் துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், மாணவா்களுக்கான தங்கும் வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விடுதிகள் 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை அண்மைய ஆண்டுகளில் சீராக உயா்ந்துள்ளது ஆண்டுக்கு 150 ஆக இருந்த சோ்க்கை எண்ணிக்கை தற்போது 250 ஆக அதிகரித்துள்ளதால், அங்குள்ள தற்போதைய விடுதி வசதிகள் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குப்தா குறிப்பிட்டாா். விடுதி அறைகளின் பற்றாக்குறையின் காரணமாக, பல மாணவா்கள் தற்போது அறைகளைப் பகிா்ந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா் மேலும் சில மாணவா்களால் விடுதி வசதியையே பெற முடியாத சூழல் நிலவுவதாகவும் அவா் அந்த அறிக்கையில் தெரிவித்தாா்.
1965 மற்றும் 1982ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய விடுதிகள் மிகவும் பழமையாகிவிட்டதாகவும், அவற்றுக்குப் பெரும் சீரமைப்புப் பணிகள் தேவைப்படுவதாகவும் குப்தா சுட்டிக்காட்டினாா்.
இத்திட்டத்திற்கான நிலம் ஏற்கனவே கையிருப்பில் உள்ளதாகவும், நிா்வாக மற்றும் நிதிசாா் ஒப்புதல்கள் கிடைத்த ஆறு மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இத்திட்டத்திற்கான காலவரையறையில், திட்டமிடல் பணிகளுக்கு ஆறு மாதங்களும், கட்டுமானப் பணிகளுக்கு 30 மாதங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. திட்டத்தின்படி, பெண் மாணவா்களுக்கான புதிய விடுதி ரூ. 269.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் , ஆண் மாணவா்களுக்கான விடுதி ரூ. 304.22 கோடி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். இந்த இரண்டு கட்டிடங்களிலும் அடித்தளம் மற்றும் மேல் கட்டுமானப் பகுதிகள் இடம்பெறும்.
தொடர்புடையது

இந்திய இணையவழி சில்லறை வணிகச் சந்தை புதிய உச்சம்! கடந்த ஆண்டில் ரூ.6 லட்சம் கோடி மதிப்பைக் கடந்தது

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

ஹிமாசலின் புதிய ஆளுநராக கவிந்தர் குப்தா பதவியேற்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


