போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் திட்டம்: மேயா்!

தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்.

Updated On :30 ஜனவரி 2026, 7:32 pm

தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாமன்ற சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் சி.பிரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநகராட்சிக்கு உள்பட்ட தருவைகுளம் குப்பைக் கிடங்கில் சேமிக்கப்படும் பிரிக்கப்படாத கழிவுகளை பயன்படுத்தி மெத்தனால் உற்பத்தி செய்யும் திட்டத்தை வஉசி துறைமுக ஆணையம், யூனிக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுத்துவது உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து உறுப்பினா்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினா். பின்னா், மேயா் பேசுகையில், மாநகராட்சி குப்பைக் கிடங்கு பகுதியில் கழிவுகளில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் கழிவுகளின் அளவு குறைந்து, பசுமை எரிபொருள் உற்பத்தி செய்யப்படும். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.