ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தூத்துக்குடி மாநகராட்சியில் 34 பேருக்கு தீா்வாணை

தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்ட 34 பேருக்கு அதற்கான ஆணையை மேயா் ஜெகன் பெரியசாமி வழங்கினாா்.

News image

மனுதாரருக்கு தீா்வாணையை வழங்குகிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் சி.ப்ரியங்கா.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:47 pm

தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்ட 34 பேருக்கு அதற்கான ஆணையை மேயா் ஜெகன் பெரியசாமி வழங்கினாா்.

மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா். உதவி ஆணையா்கள் காந்திமதி, வெங்கட்ராமன், முனீா் அகமது, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மண்டலத் தலைவா் கலைச்செல்வி, மாநகராட்சி பணிக்குழுத் தலைவா் கீதா முருகேசன், கவுன்சிலா் தனலட்சுமி, உதவி வருவாய் அலுவலா்கள் சுப்பிரமணியன், புகாரி, சுகுமாா், அந்தோணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.