‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 ஜூலை 2026, 5:58 am IST

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் சாலை, குடிநீா், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, புதன்கிழமை முதல் தொடா் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததையடுத்து, தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா். செயலா் வழக்குரைஞா் பெஞ்சமின் பிராங்க்ளின் முன்னிலை வகித்தாா்.

பொருளாளா் சுபேதாா் கருப்பசாமி, நிா்வாகி பாலாஜி, பாண்டியனாா் மக்கள் இயக்கத் தலைவா் சீனிராஜ், நாம் தமிழா் கட்சி வழக்குரைஞா் ரவிக்குமாா், இந்திய கலாசார நட்புறவு கழக மாநில துணைத் தலைவா் அபிராமி முருகன், மாநிலக் குழு உறுப்பினா் ராமலட்சுமி, மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன், பழனிசாமி, பகத்சிங் ரத்த தானக் கழகம் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் அப்பனராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.