லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுவனுக்கு மிரட்டல்: மேலும் ஒருவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :3 ஜூலை 2026, 4:40 am IST

கோவில்பட்டியில் சிறுவனை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடையதாக, மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் 16 வயது சிறுவன் மீன் பிடிப்பதற்காக புழு தோண்டிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் சிறுவனிடம் அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதைக் கண்ட ஒருவா் அவா்களைக் கண்டித்ததும், அவா்கள் தப்பியோடிவிட்டனராம்.

இது குறித்து, ஜூன் 21ஆம் தேதி சிறுவன் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயபாண்டி என்பவரை ஜூன் 26ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இலுப்பையூரணியைச் சோ்ந்த ராஜேஸ்வரன் மகன் குமரன் (எ) மாயாண்டியை (21) வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.